Latest Movie :
Recent Movies

WHY I LOVE YOU













{[['']]}

I NEVER LEAVE YOU

UNLESS YOU TELL YOU GET BETTER THAN ME


==========================================================================
Come a little closer
Baby, Come a little closer
Let me whisper in your ear
Let me tell it to you softly
That no one else will hear
What I have to say it private
and is only for us

I love you with my heart
I love you with my soul
I know you believe in me
I know you love with me
My love is deep
Your love is deeper
Our love is deepest
Why you want to hate.....
Tell me baby..... Tell me....

How do I start?
What do I say?
Why do I ask?
We loved sincerely
We loved as breath
So, How do I start?
Tell me baby..... Tell me....
==========================================================================
WHY I LOVE YOU?

Why I love you....?

You give to me hope
When life pulls me down
You give to me believe
When my love pulls down
You teach me to care
And help me to share
You make me honest
With kindness the best

From you I earned love
From you I leaned some ways
From you I burned my sad
From you I renewed my desires

When I hear love
I think of you
Why?
You are the world of my love
I love you
Because you are so kind
Thoughtful and caring
I love you
Because you are so pleasant
Lovely and sharing

You mad me the man I am

Tell me
Why you late....
Tell me baby..... Tell me....
==========================================================================
HOW CAN I FORGET YOU?

I never forgive me
If I forget my eyes
But can
If those forget me
Why?
You are my eyes baby....
You are my eyes

Through the golden eyes
I have shed many tears
I know it's been awhile since we spoke,
But my heart is still broke
Everything inside of me died all at once
Feeling as if I had no more love
Not for myself or
Anyone else

==========================================================================
WHY YOU HATE.......?
          I KNOW WHY YOU HATE.....?

Your feelings
We both pretended
But I have to confess
That I do still care
The feelings are still there
The truth is in my eyes.
I looked in yours
You looked in mine
I found what I needed to find
What about you.... Did you see inside?

May be it's all over between us
But in my heart I can’t give up
I can't forget what we had before
It could be that way once more.
We never know unless we try.
My feelings just refuse to die.

You can’t take what's in my heart
We tried many times
To just say "good bye"
Wish is not in deeper
In our heart
Just in words
Wishing we could, but just can't
And I hope that you can understand.

I can’t forget the time we shared.
I'm afraid if I let go
I'll never really know
If it could have been
The way it was meant to be
I CANT FORGET YOU,

The question is
"CAN YOU FORGET ME?"
CAN YOU HATE ME?"
From your deepest heart........?
Tell me baby..... Tell me. 

I can’t accept
Even tight friendship with boys
Because you are my wife
In my heart

I never leave you
Unless you tell that
You get better than me


BUT YOU WILL BE IN MY HEART
{[['']]}

MOOD POEMS



{[['']]}

RAHUMANIYA BATH BEACH PARK


{[['']]}

கறை படியா கற்பனைகள்

-----------------------------------------------------------------------------
 




புது வருடம் வந்தாலும்
புது விழாக்கள் என்றாலும்
என் கண்களையே அலங்கரிப்பேன்

சோகம் வந்தால் - என்
நெஞ்சைப் பிழந்து
நீரூற்றாக்குவேன் - ஏன்?
என் கண்கள் நீ என்பதனால்!

நெருப்பு கொண்டு எரித்தாலும்
இடி வந்து கிழித்தாலும்
என் கண்கள் மட்டும் இறக்காது

கத்தி கொண்டு வெட்டினாலும்
ஊசியினால் குத்தினாலும்
மாறாது என் கண்களின் உருவம் - ஏன்?
என் கண்கள் நீ என்பதனால்!

வீதியில் சென்றாலும்
கடைத்தெருவில் நின்றாலும்
வாலிபர்கள் வளைத்து
என் கண்களை சீண்டுவர்

அடை மழை என்றாலும்
சுடு வெயில் என்றாலும்
என் கண்களுக்கே குடை பிடிப்பேன்

கனவிலும் என் கண்கள்
சிரித்துக் கொண்டே இருக்கின்றன
நினைவிலும் என் கண்கள்
துடித்துக் கொண்டே இருக்கின்றன - ஏன்?
என் கண்கள் நீ என்பதனால்!

--------------------------------------------------------------------------------------------

 


தாயின் கருவறையில்
தான் தோன்ற அறிந்ததும்
தாலாட்டைக்கற்றுவிட்டு
தனக்காக பெயர் சூட்ட
நடு நிஷpயும் பாராது
நகரெங்கும் அலைந்தாராம்

தனது பிள்ளை தரித்ததும்
தாயின் வயிறேந்தியும்
தாகத்தை தீர்ப்பதற்காய்
தானறிந்த சுவையேந்தியும்
தானாக எனது பிள்ளை
இருட்டறையில் வெளிச்சத்தில்
வளர வேண்டும் என்றெண்ணி
தன் மனைவியை
தாய்போன்று சீராட்டி
பாராட்டி பாலூட்டி
தன் நெஞ்சில் சுமந்தாராம்

என் நெஞ்சைப் பிழந்தாலும் சரி
என் இதயத்தை பிழிந்தாலும் சரி
என்னை உயிரோடு வெட்டி புதைத்தாலும் சரி
எனக்கு நான் உயிரல்ல
என் அன்புக்குரிய வாரிசுதான் உயிர்
என்று என் மூச்சாய் திகழ்ந்தார்
அவர்தான் என் உயிர் தந்தை.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

அகிலத்தின் அருட்கொடையாய்
அனைத்துலகின் உட்பொருளாய்
ஆத்திரத்தின் அடக்கஸ்தலமாய்
ஆண்களின் ஆணிவேராய்
இறைவனின் இறுதித் தூதாய்
ஈன்றெடுக்கப்பட்ட நபி

உத்தம திரு நபியாம்
ஊனமுற்றோர்க்கு வழிகாட்டியாம்
எழில் மிகு தேசங்களின்
ஏழைகளின் தோழனாம்
ஒற்றுமையின் சின்னமாகத் திகழும்
இவ்வுலகின் ஒளி விளக்கு
இறைவனால் அருளப்பட்ட இந்நபி

உலகுக்கு ஓர் ஏந்தலாகவும்
அத்தனைக்கும் ஓர் அன்பளிப்பாகவும்
அனுப்பப்பட்ட இந்நபி

இவர் இல்லையேல்
உலகம் உண்டோ!

இவருக்கு அருளப்பட்ட
புர்கான் எனும் வேதம் இன்றேல்
நாம் எங்கோ!!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 



என் வெளிச்ச விரல்களை நீட்டி - உன்
இருளை அகற்றுவேன்

வண்ண வண்ணக் கவிதைகளால்
வானுலகை அலங்கரிப்பேன் - நீ
என்னைக் காதலித்தால்...

என் இதயவறைகளை உடைத்து
மலர் தூவி மாளிகையாக்குவேன்

வற்றாத நதியையும்
வற்றவைப்பேன் - நீ
என்னைக் காதலித்தால்...

என் ஆனந்தக் கண்ணீரால் - உனக்கு
கவிதை எழுதுவேன்

நான் உயிரோடு இருக்கும் வரை
உன் நிழலாய் மாறுவேன் - நீ
என்னைக் காதலித்தால்...

காற்றலையில் மிதக்கும் தூசுகளை
காதலின் தூதனாய் மாற்றுவேன்

உன் இதயத்தின் குழாய்களுள்
குருதியாக உட்புகுவேன் - நீ
என்னைக் காதலித்தால்...

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 


பிரிவினை வெறுக்க
நான்தான் சுவாசிக்கிறேன் - என்று
சொன்னவன் நான்தான்

கல்வியைத் தவிர - என்
கண்களுக்கு எதையும்
பார்க்கத் தெரியவில்லை - என்று
சொன்னவன் நான்தான்

நட்பு எனும் கோப்பையை
என் உயிர் பிழிந்து
ஊற்றி நிரப்புவேன் - என்று
சொன்னவன் நான்தான்

நம் கல்விக் கூடத்தில்
கடல் முத்துக்களையும்
மின்னும் நட்சத்திரங்களையும்
காண்கிறேன் - என்று
சொன்னவன் நான்தான்

நாம் பிரிந்தால் - மழை
மேல் நோக்கிப் பெய்யும் - கடல்
கண்ணீரால் நிரம்பும் - காற்று
என்னை மறிக்கும் - இடியும் மின்னலும்
என்னை கவிழ்க்கும் - என்றும்
சொன்னவன் நான்தான்.

இதோ! அடிக் கோடிட்ட வார்த்தைகளால்
பிரிவு பற்றி சொல்வதும்
நான்தான்

என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடாதீர்கள்.

நான் கல்வி கற்றது - நிஜம்
கனவு வளர்த்தது - நிஜம்
என் ரத்தத்தின் அணுக்கள் பலவும்
சந்தித்துக் கொண்டால்
பள்ளிக் கூடம் என்று சொன்னது - நிஜம்

என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடாதீர்கள்.

நட்புகள் தெரிந்த எனக்கு - அதை
பிரியாமல் கொள்ளத் தெரியவில்லை
இலங்கையின் கல்வி என்பது
இறுக்கமான நட்புடன் கூடியது
என்று சொன்னேன் - ஆனால்
கல்வியுடன் சேர்ந்த நட்பு என்பது
காட்டி மறைகின்ற கானல் நீர் என்று
சொல்ல மறந்தேன்

கல்விக்கு சிறகு மட்டும்தான் உண்டு
நட்புக்குத்தான் இதயமே உண்டு
எனக்கு சிறகு தந்த கல்வியா
வாழ வைக்கப்போவது? - இல்லை
நட்பு இழந்த வாழ்க்கை
முகம் இருக்கும் முண்டம் போன்றது.

தாயை விட என் எதிர்காலத்தை
நேசிக்கும் - தந்தை
நீடூழி வாழ்வதற்கு என்றும்
பிரார்த்திக்கும் என் - அன்னை
என் பெறுபேறு அறிந்திருந்தும்
அரவணைப்புடன் உரம் ஊட்டும் - ஆசான்
இவை அனைத்திற்கும் மேலாக
நாளுக்கு நாள் என் சுவாச வாயு வழங்கும்
ஈருலக - இறைவன்
அனைவர்க்கும் என் ஆழமான
இதய நன்றிகள் உரித்தாகுக.

உயர் தரம் இல்லாத போதும்
எப்படி நான் இங்கிருப்பேன்!
நம் பாடசாலை - கல்வியின் பூமிதான்
உயர் கல்வியின் பூமியல்ல

போகிறேன்
உங்களை மறக்க முடியாதவன்
என்னை மறக்கமாட்டீர்கள் என்று
நம்பிக்கையோடு போகிறேன்

என்னை மன்னித்து விடுங்கள்
என்னை மறந்து விடாதீர்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 


சொற்களாய் வந்த கற்கள்
சொற்களையே விரட்டின

இதயத்தில் பூத்த
இளஞ் செடிகள்
உதிராற்றில் மூழ்கின


இடியும் மின்னலும் - என்
இதயத்தை சுருட்டி
கனவுகளை அழித்தன

புயல்கள் தாக்கி
என் புன்னகைகள் பறிந்தன - எம்
பிரிவு கேட்டு!

முற்றத்து மலர்களெல்லாம்
முகில்களாய் மாறி இருண்டதுடன்

சுற்றி வளைத்த நினைவுகள்
சுயரூபம் காட்டின

இரவுகளில் நனைந்த தலையணைகள்
ஒளி தேடி ஓடின

என்றுமே உன்னை
ரசிக்கின்ற என் இதயம்
எரிமலை போல்
எரிந்தது

ஏக்கமழையின் தேக்கங்கள்
என் உள்ளக் கிடங்கில் தேங்கின

உன் ஞாபக விழுதுகளில்
ஜீவித்திருந்த என்
உயிரின் வேர்கள் அறுந்து வீழ்ந்தன - எம்
பிரிவு கேட்டு!

ஹிஹ்...
மங்குவதென்றால் - மதி எதற்கு?
மறைவதென்றால் - மாலை எதற்கு?
உதிர்வதென்றால் - மலர் எதற்கு?
பிரிவதென்றால் - காதல் எதற்கு?

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 




எத்தனையோ ஆயிரம்
இரவுகளை இழந்து
புத்தகங்கள் வடிவில் கவியும் வரைந்து
கட்டெறும்பும் புகழ சே(சு)வைகள் செய்து
சிற்றுயிர் மட்டுக்கும் மனங்கவரவைத்த
தந்தைக்கோர் தந்தை
அவரை
தேன் ஊற புகழ்ந்து
உதிர் ஒழுக வடிக்கும் இந்நாளில்....

அஷ;ரஃப் எனும் கோப்பையில்
நம்; உயிர் பிழிந்து
ஊற்றி நிரப்புவோம்
என்று சொன்னோம்;....

அவர் பிரிந்தால்
மழை - மேல் நோக்கிப் பெய்யும்
கடல் - கண்ணீரால் நிரம்பும்
காற்று - எம்மை மறிக்கும்
இடியும் மின்னலும் - எம்மை கவிழ்க்கும்
இமயம் - சரிந்து இடிந்து விழும்
தீபம் - அணைந்து இருண்டு விடும்
வீணை - நரம்பறுந்து விரண்டு விடும்
எம் இதயங்களின் நாடி நரம்புகள்
அறுந்து விழும் - என்றும் சொன்னோம்....

இதை சிந்தித்து விடுங்கள்
அஷ்ரஃபை மறந்து விடாதீர்கள்

அன்னையில் அரவணைப்பில் - குழந்தை
அழகு எனும் கலையில் - ஓவியம்
அரசியல் அனுபவத்தில் - தந்தை
கலை பொக்கிஷத்தில் - கவிஞன்
அவர்தான் எம்.எச்.எம். அஷ;ரஃப்

தென்கிழக்கின் விடிவெள்ளி
சட்டத்தின் காவலன்
அன்பின் பிறப்பிடம்
அறிவின் இருப்பிடம்
சேவையின் சிகரம்
அவர்தான் எம்.எச்.எம். அஷ;ரஃப்

வெயில் சூழ்ந்தால் - மரம்
காற்றடித்தால் - கிளை
இடி வீழ்ந்தால் - தண்டு
மருந்தென்றால் - இலை
கசப்பென்றால் - கனி
வாக்குறுதி என்றால் - வேர்
அவர்தான் எம்.எச்.எம். அஷ;ரஃப்

மரம் உடைந்து - கிளைகளாகவும்
கிளை பிரிந்து - தண்டுகளாகவும்
தண்டிருண்டு - இலைகளாகவும்
இலை கருகி - காய்களாகவும்
காய் சிவெந்து கனிகளாகவும்
மாற்றாதவர்
அவர்தான் எம்.எச்.எம். அஷ;ரஃப்

சாக்கடையாய் கிடந்த
ஒரு சமூகத்தின் தலைவிதியை
பூக்கடையாய் மாற்றினார்
ஒற்றுமையிழந்து தவித்த
ஒரு சமுத்திரத்தை - தேன்கூடாய் மாற்றினார்
அவர்தான் எம்.எச்.எம். அஷ;ரஃப்

இதை சிந்தித்து விடுங்கள்
அஷ்ரஃபை மறந்து விடாதீர்கள்

மலை சரிந்துவிட்டது என்றார்கள்
நம்பவில்லை
அரணாயக்கா எரிந்துவிட்டது என்றார்கள்
நம்பவில்லை
மேகங்கள் மூடிக்கொண்டன என்றார்கள்
அதையும் நம்பவில்லை
இஸ்ராயீல் கவர்ந்து சென்றார் என்றார்கள்
நம்பாமல் நம்பினோம்.

நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானம்
முகில்களால் இடி முழங்கின
சில்லென்று வீசிய காற்று
சடீரென்று மறைந்தன
சிறை வைக்கப்பட்டிருந்த கரைகள்
நடுக்கடலினுள் பாய்ந்தன
ஏவுகணைகளாலும்
துப்பாக்கி ரவைகளாலும் காயப்படாத இதயம்
மூச்சுக் காற்றின்றி வெடித்து சிதறின
கண்களில் நீராறும்
கவிதைகளில் உதிராறும் பெருக்கெடுத்தோடின
சுற்றித்திரிந்த கனவுகள்
வற்றிக்கிடந்த உணர்வுகள்
சுடுகாடாக மாறின - அவர் பிரிவுகேட்டு!!

முடியவில்லை
எம்மால் முடியாது
அது இறைவன் வாக்கு

சொல்கிறேன்
செல்கிறேன்
மறைந்த மாமனிதர்
'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும்
சொர்க்கலோக கதவுகளைத் திறந்து
மலக்குகளின் வரவேற்போடு
சுவனபதி நுழைவார்
என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன்
செல்கிறேன்

அவருக்காய் பிரார்த்தியுங்கள்
அஷ்ரஃபை மறந்து விடாதீர்கள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 



அன்று தொட்டின்று வரை
அறிவின் அடிப்படையாய்
அகிலத்தின் தேடலாய்
அறிமுகமானது - நூலகம்

ஆண்டவனின் கூற்றுகளும்
ஆதாமின் அருட்கொடையும்
ஆட்சிகளின் அறக்கருத்தும்
ஆசையாய் வாசித்திட - நூலகம்

இன்பச் சுவை எமக்களிக்கும்
இவ்வுலகும் மறுவுலகும்
இற்றை முன் நூற்றாண்டும்
இன்பமுடன் வாசிக்க - நூலகம்

ஈடேற்றம் பெறும் பண்பும்
ஈற்றுலகின் விருட்சமதும்
ஈந்துதவும் பண்பதுவும்
ஈர்பொழுதும் வாசித்திட - நூலகம்

உத்தமர்கள் சரித்திரமும்
உலகினுயிர் சேதமதும்
உள்ளமதன் கவியதுவும்
உண்மையுடன் வாசிக்க - நூலகம்

ஊருக்கான திட்டமதும்
ஊர்களதன் சரித்திரமும்
ஊனமுற்றோர் நிலையதுவும்
ஊர்ஜிதமாய் வாசிக்க - நூலகம்

எட்டாத சொற்பதமும்
எழுத்தறிவின் உன்னதமும்
என்பில்லா நாக்கதனால்
எரிவின்றி வாசிக்க - நூலகம்

ஏழ்மையதன் சரித்திரமும்
ஏற்றமதன் அடிப்படையும்
ஏர்பூட்டும் திறனதுவும்
ஏழ்மையுடன் வாசிக்க - நூலகம்

ஐம்பெரும் காப்பியமும்
ஐ வயதின் பண்புகளும்
ஐயமற்ற வாழ்வதுவும்
ஐம்பதிலும் வாசிக்க - நூலகம்

ஒற்றுமையின் குணமதுவும்
ஒவ்வாத பண்புகளும்
ஒளிவீசும் மதமதுவும்
ஒன்றன்பின் வாசிக்க - நூலகம்

ஓரில்லப் படைப்புகளும்
ஓலையில் எழுத்துகளும்
ஓவியத்தின் பண்புகளும்
ஓய்வுடனே வாசிக்க - நூலகம்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 




வானவில்கள் உடைந்து
வர்ண வர்ண நட்சத்திரங்களாய்
ஜொலித்தன

வானத்தின் கார்மேகங்கள்
வண்ணத்துப் பூச்சிகளாய்
மாறின - உன்
வரவு கண்டு

பூவிதழ்கள்
புல்லாங்குழல்களாய் மாறி
இசை பாடியதுடன்

புற்தரைகளெல்லாம்
பட்டாசு கொழுத்தி
மகிழ்ந்தன - உன்
வரவு கண்டு

மரம் செடிகொடிகள்
மலர் தூவி உன்னை
வரவேற்றதுடன்

பட்டாம்பூச்சிகள்
தேன் பொழிய
தேன் பூச்சிகளாய் மாறியது மாத்திரமன்றி

சில்லென்ற காற்றும்
சிறு கவிகள் இயற்றி
அலங்கரித்துப் பாடின  - உன்
வரவு கண்டு

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கல்விக் கூடத்தில் மகிழ்ந்தவர்கள்

கறைபடியா உள்ளத்துடன்
கல்விக்கு ஒளியூட்டி
கலாசாரத்திற்கு வலுவூட்டி
கடந்து வரும் பாதையிலே
கற்பூர வாசனை போல்
கமகமக்கும் சேவைகள்!!
சுதந்திர மன்றமே நீ வாழ்க!

நங்கையரில் மின்னும் தங்கமாய்
நட்பு எனும் பண்பில் வைரமாய்
நம்;பிக்கையின் நட்சத்திரமாய்
நம் பிரதேசத்தை ஏந்தி வரும்
சுதந்திர மன்றமே நீ வாழ்க!

உன்னைப்போல் எத்தனையோ
உலகெங்கும் தோன்றினாலும்
உன்னதமாய் ஒளிர்வு பெற்று
உத்தமி போல் புகழ் ஏந்தும்
சுதந்திர மன்றமே நீ வாழ்க!

சுதந்திர மன்றமே........ நம்
வையகத்தில் நிலை பெற
வைரமுத்தும் வாய் மொழிய
வைரத்தில் வாழ்த்தி
வைக்கின்றேன் முற்றினை
சுதந்திர மன்றமே நீ வாழ்க!
சுதந்திர மன்றமே நீ வாழ்க!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 


அன்றுதொட்டின்று வரை
அகிலத்தின் அடித்தளம்
அனைத்துலகின் அரும் பொருள்
அன்னை ஈன்ற பிள்ளை
அதுதான் சிறு பிள்ளை

சிற்றென்பும்
சிற்றுயிரும் கொண்ட
சின்னஞ்சிறுவர்
சிற்றுலகம் என்பர் - ஆனால்
சிற்றுலகை பிழக்க
சின்னஞ்சிறுவர்
சிற்றுயிரும்
சிற்றென்புடன்
சிறகடித்தால் போதும்

தலைமையதன் அடித்தளம்
தனிவழியின் பிறப்பிடம்
தடைதாண்டும் சிற்றிடம்
அதுதான் சிறுவர் இடம்

வலுவூட்டவே ஒளியேற்றுவோம்
ஒளி இழக்கா வலுக்கொண்ட சிறுவர் கரத்தினை

பவனி வரும் வேளையிலும்
பல்லினங்கள் சேர்கையிலும்
பசியாற உவந்தளிக்க
பரிசின்றி பணி புரிவோர் - எம் சிறுவர்

இத்தனைக்கும் அத்தனையாம்
அத்தனைக்கும் ஓர் முத்து எனும்
கொந்தளித்துக் கொதிக்கும்
சமுத்திரத்தையும் மிஞ்சும்
சக்திவாய்ந்தோர் - சிறுவர்

எதிர்கால சிந்தனை
எதிர்பாரா சக்திகள்
எத்தனையோ உணர்வுகள்
எரிமலையுள் உலகம்
அதுதான் சிறுவர் உலகம்

வலுவூட்டவே ஒளியேற்றுவோம்
ஒளி இழக்கா வலுக்கொண்ட சிறுவர் கரத்தினை

ஞாபகத்தின் இருப்பிடம்
ஞானிகளின் கருத்திடம்
ஞானவான்கள் போற்றிடும்
யாசகர் வாசகம்

சட்டத்தில் முதலிடம்
சன்மார்க்க தோற்றிடம்
சரித்திரத்தில் முக்கியத்துவம் - அதுதான்
சர்ச்சையற்ற சிறுவர் இடம்

பச்சிளம் பாலகனையும்
பரிசளித்து கௌரவித்து
பாராட்டும் தொனி அதனை
பாரினிலே உயர வைப்போம்

சுட்டெரிக்கும் நெருப்பில் பற்றினாலும்
சடீரென்ற காற்று புரட்டினாலும்
சிறைவைத்த இமயம் இடிந்து பாய்ந்தாலும்

வலுவூட்டவே ஒளியேற்றுவோம்
ஒளி இழக்கா வலுக்கொண்ட சிறுவர் கரத்தினை

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 



இரண்டாயிரத்து ஒன்பதின் 
இரண்டாம் மாதமது
இருபதாம் நாளின்
இருளாகும் நிமிஷமது....

பாடங்கள் நிறைந்ததுமே
பாதையின் ஓரத்தில்
பாசாங்கு செய்தவளாய்
பார்த்து விட்டு நீ சென்றாய்

உன் குரல் கேட்டதுமே 
என் உள்ளம் சாய்ந்தது - நீ
எப்போது வருவாய்
என்பதை அறிய ஆவலாய்

கல்வி என்றும் கவிதை என்றும்
கலகலத்த குரலினிலும்
மறைவான என் மனதில்
மலர் போன்று வீற்றிருந்தாய்

நண்பர்களுள் நண்பராய்
நட்பினிலே சோடியாய்
நாடறியும் அழகியாய் 
நாள் தோறும் தோன்றினாய்

நாள் செல்லும் வேளையிலே
நட்பு எனும் விதை வெடித்து
காதல் எனும் நாற்று ஒன்று
காற்றினிலே பரவியது

காதலிக்கின்றேன் என்றாய்
என் கண் கலங்கியது
சிரித்தனை சொன்னாய்
என் மனம் ததும்பியது

நாம் காதலித்தால் - அது
கலங்கும் என்றேன் - ஆனால்
கலக்கமதை நீ
தெளியச் சொன்னாய்

தெளிந்தன நம் கனவுகள்
விழுந்தன நம் உணர்வுகள்
எழுந்தன நம் மனதுகள்
இணைபிரியா காதலர்கள் என்று!!

கனவா இது நனவா என்றேன்
கனவு அற்ற நனவு என்றாய்
காதலா இது கற்பனையா என்றேன்
கற்பனை அற்ற காதல் என்றாய்

வெடித்தன என் நனவுகள்
விழுந்தன என் கனவுகள்
பறந்தன என் உணர்வுகள்
பறித்தன உன் மனதுகள்

இதயத்துள் கிடந்த நம் பாசங்கள் 
காதலாய் மாறின
காற்றும் ஒலியலையும் - நம்
தூதுவாய் மாறின

இரவுகள் பகலாகின
பகல்கள் இரவாகின
எது எதுவாகினும்
உன்னுள் பணம்
என்னுள் ஏழ்மைதானே!

காதலுக்கு கண்கள் இல்லை 
என்பது மெய்தானே - ஏன்?
நீ - என் 
ஏழ்மையைப் பார்த்தா காதலித்தாய்?

நம் காதல் நழுவி - உன்
தாயில் வீழ்ந்தது - ஆனால்
அவளோ தன் நெஞ்சைப் பிழந்து 
ஊற்றினாள் உன் தந்தையிடம்

பிளக்கச் சொன்னர் - நம் காதலை
விழுங்கச் சொன்னர் - நம் உணர்வுகளை
உடைக்கச் சொன்னாய் - நம் பாசத்தை
முடியவில்லையே உன் அன்பனால்!!

ஊரெல்லாம் பற்கள் முளைத்தன - ஏன்?
நம்மைக் கேலி செய்வதற்காக
இருந்தாலும் அது கேலியல்ல
நம் காதலின் பிரபல்யமல்லவா!!

தண்டனையில் சிவந்தன - உன்
பூப்போன்ற மேனியது
நீரூற்றாய் மாறின - என் 
கண்களின் ஓடையது

இரவில் 
நான் தலையணையை நனைப்பேன்
நீயோ 
கண்ணீரால் கடலையே மூடுவாய்
தலையணையாவது சாட்சி சொல்லியதா!!
நாவிருந்தால் சொல்லியிருக்கும்

தொடங்கின நம் பிரிவு
இடிந்தன நம் உணர்வு
வெறுத்தன நம் குடும்பம்
இருண்டன நம் காதல்

நாட்கள் மட்டும் சென்றன
முட்கள் பல முறிந்து 
தடை வேலியாகின

நிமிஷங்கள் வருஷங்களாகின
வருஷங்கள் ஆயுளாய் மாறின
எது எதுவாகினும்
உன் மனம்தான் என் மனம்
என் மனம்தான் உன் மனம்
இணையும் எப்போதாவது
சேரும் எங்காவது
காத்திருப்பேன் உன் அடைவுக்காக.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 



(கன்னிக்கவிதை - 2010)

நீ
காதல் வசப்படு
உனக்கு
கற்களும் முட்களும்
சொற்களாய் வரும்

உடல் எங்கும்
கம கமவென்று
மணம் வீசும்

காதலே உன்னுள்
ஆட்சி செய்வதுபோலிருக்கும்

நீ கல்வி கற்கும்போதெல்லாம்
கற்பனையையே வளர்ப்பாய்

பேனா முனையிலும்கூட
காதல் எனும் மையை ஊற்ற
நினைப்பாய்

நீ
காதல் வசப்படு

நீ எழுதுகின்ற
ஒவ்வொரு வார்த்தைகளும்
கதைகளாயும்
கவிதைகளாயும் மாறும்

குப்பை மேட்டில்
நீ உறங்கினாலும்
புயல் காற்று உன்னை சீண்டினாலும்
புழுதியே உன்னை தீண்டாது

டப் டப்
என்று துடிக்கும்
உன் இதயம் அடிக்கடி
காதல் காதல் என்று துடிக்க ஆரம்பிக்கும்

செக்கச் சிவந்த வானம்
சில்லென்ற காற்று
ஆழமான கடல்
புன்னகைக்கும் பூக்கள்
இவையனைத்தும்
காதலிப்பவர்களுக்கே என்பாய்

மறு உலகில் தெரிகின்ற சொர்க்கம்
என் கண்முன்னே என்பாய்
அவ்வுலகில் வருகின்ற நரகம்
எமக்கில்லை என்பாய் - நீ
காதல் வசப்பட்டால்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 




பத்து மாதம் சுமந்து
என்னைப் பெற்ற தாய்
பக்தி உள்ளத்தோடு
என்னை வளர்த்த தாய்
ஏந்தல் நபிமொழியை
எனக்காய் பயின்ற தாய்
ஏட்டில் பொதிந்தவற்றை
என்னுள் ஊட்டும் தாய்
கண்ணைப் போன்ற தாய்
கண்ணாய் வளர்த்த தாய்
அவள்தான் என் தாய்

கோபம் வரும் போது
குற்றம் பொறுக்கும் தாய்
அன்பு வரும் போது
என்னுள் அடக்கும் தாய்
அன்பின் உருவம் தாய்
ஆசையின் வடிவம் தாய்
கல்வி கற்கும் போதும்
கனவை வளர்க்கும் தாய்
அவள்தான் என் தாய்

என்னைப் பிறக்கும் போது
வலியில் துடிக்கும் தாய்
என்னில் இரங்கும் போது
அன்பை விதைக்கும் தாய்
எனது சுவர்க்கம் தாய்
எனது இரக்கம் தாய்
எனது இன்பம் தாய்
எனது அன்பும் தாய்
அவள்தான் என்னைப் பெற்ற தாய்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தூணிலும்
துரும்பிலும்
வானிலும்
வயலிலும்
உள்ளவன் நீ

வையகம் முழுவதும் நீயென்றால்
உன்னை
என்ன பெயர் சொல்லி
நான் அழைப்பேன்

அன்னையில்
அன்பு பலகோடி
ஆயினும்
அன்னையை விட
பலகோடி அன்பு பொழியும் நீ....
நான் உன்னை
எவ்வாறு வர்ணிப்பது

எல்லையே அற்றது சமுத்திரம் என்பர்
எல்லாவற்றையும் மிகைத்தவன் நீ
எல்லையே அற்ற உன் வல்லமைக்கு
எல்லைகளை நான்
எவ்வாறு வரைவது

எனக்கு நீதான் இறைவன்
உனக்கு நான்தான் அடியான்
என்றே நான் புகழ்ந்திடவும்
என்றே நான் மகிழ்ந்திடவும்
வல்லவனே அருள்பொழிவாய்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

   

இதயத்தை திறந்து பார்த்தேன்
உதிரமாய் ஒழுகிறது
உதிரத்தை உறிஞ்சி பார்த்தேன்
சோகங்கள் துடிக்கிறது

ஒழுகும் உதிரம்
சிவப்பு என்றேன் - ஆனால்
அதன் சுவையோ உவர்ப்பாகியது
                                                                    
அப்போதுதான் நினைத்தேன்
அது வெறும் உதிரமல்ல
சோகத்தில் சிவந்த கண்ணீர் என்று

இதயத்தை பிழிகிறேன்
உதிரமாய் வடிகிறது
வடிந்த பின் பார்க்கிறேன்
வலைபோன்று தெரிகிறது
அந்நேரம்தான் நினைத்தேன் - அது
வலை போன்ற உருவம் கொண்ட
சோகத்தில் உண்டான
காயங்கள் என்று.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

இறைவனுக்கஞ்சிய இளைஞர்களே!

இன்னல் மறந்து
இறையாசி பெற்று
இவ்வுலகை வெல்ல - என்
இதயக் கிடங்கிலிருக்கும்
இனிய தூறல்களில் சில

இற்றை முன் நூற்றாண்டிலிருந்து
இலங்கையின் அரசியலும்
இருளகற்றும் தலைமைகளும்
இளைஞர்களுக்கென்று
இன்னது என்ற வரையறையை
இனிதே மேற்கொண்டாலும்
இன்று நம் முன் வந்திருக்கும்
இளைஞர் பாராளுமன்றம்
இலங்கையில் இளைஞர்களுக்காக........ ஏன்?

இன்றைய சட்டத்தின் ஓட்டைகளை சிதறடித்து
இன்னும் சடங்காய் கிடக்கும் உதிரத்தை முறியத்து
இளைஞர்களின் மனதில் பொன்னெழுத்துக்களால் பொறிந்திருக்க
இலங்கை இளைஞர் பாராளுமன்றம்

இது - நாம் நினைக்கா மன்றங்களில் ஒன்று
இதுவே - நாம் பேசாக் குன்றுகளில் ஒன்று
இதுதான் - நாம் பார்க்கா பாலங்களில் ஒன்று
இதுவும் - நாம் சுவைக்கா இனிப்புகளில் ஒன்று

இலங்கையின் பாராளுமன்றம்
இனிதான மாகாண சபை
இனிதியங்கும் மாநகர சபை
இங்கிருக்கும் பிரதேச சபை
இதேபோன்று இன்னும் பல என்றாலும்
இவ்வுலகின் புரட்சியில்
இளைஞர்களின் தனி அலகுதான்
இளைஞர் பாராளுமன்றம்

இளம் சந்ததியின் வழிகாட்டியாய்
இன்றைய பாடசாலைகள் அமைந்தாலும்
இளம் செல்வங்களின் அன்பிற்காய்
இந்திய பாரதி அமைந்தாலும்
இளம் நெஞ்சங்களின் தூறலாய்
இனிய பாடல்கள் அமைந்தாலும்
இளம் சமுதாயத்தின் துடிப்புக்கும்
இடைவிடா துடிக்கும் வாலிபர் முயற்சிக்கும்
இன்று பாடுபடுபவர்களில்
இவனும் ஒருவன்

இளசுகளின் அன்பு என்றால் என்ன?
இளைஞர்களின் கல்வி என்றால் என்ன?
இவர்களின் தொழில்வாய்ப்பு என்றால் என்ன?
இவர்களையெல்லாம் எவ்வாறு வழிநடாத்துவது? என்றெல்லாம்

இரவு பகல் விழி விழித்து
இளைஞர் பாராளுமன்றில் - முடியுமானவற்றை
இளம் சமுதாயத்திற்கு மேற்கொண்டு

இளைஞர் கழகங்கள்
இளைஞர் அமைப்புகளுக்கெல்லாம்
இனிதே சேவைகள் செய்து
இன்புற்று வாழும்
இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பி
இவ்வுலகில்
இலங்கை நாடு மட்டுமன்றி
இனிதுழைக்கும் மூலைமுடுக்கெல்லாம்
இவர்களின் ஒலி எழும்ப
இளைஞர் பாராளுமன்றில்
இனி உரத்துப் பேசும் ஒலியில்
இவனும் ஒருவன்

இளைஞர்களே!
இவனுக்கு வாக்களியுங்கள்
இவன் மூலம் நீங்கள் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்

இளைஞர்களே!
இவனுக்கு வாக்களியுங்கள்
இவன் மூலம் நீங்கள் வெற்றியை தழுவிக் கொள்வீர்கள்

இளைஞர்களே!
இவன் வென்றால்
இளைஞர்களிடையே..

அறிவு வளரும்
ஆதரவு உரக்கும்
இருள் அகலும்
ஈடேற்றம் பெருகும்
உதிரம் சுரக்கும்
ஊனம் பறக்கும்
எதிர்ப்பு கசச்கும்
ஏழ்மை மறையும்
ஐயம் நீங்கும்
ஒற்றுமை நிலைக்கும்
ஓர்மை ஓங்கும்
ஒளடதம் மறக்கும்

இளைஞர்களே!
இவன்தான் - நமது இலக்கு
இவனும்தான் - நமது நிலைக்கு
இவனுக்கு - வாக்களித்து
இவனை வெல்லவைப்போம்
இவனுக்காய் இன்னும்
இளைஞர்கள் அணிதிரண்டு
இறைவனைப் பிரார்த்திப்போம்
இறைவன் பெரியவன்

இருளகல
இளைஞர்க்காய்
இதயமுள்ள இளைஞன்
இளைஞர்க்கு இனியவன்

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 




புது வருடம் வந்தாலும்
புது விழாக்கள் என்றாலும்
என் கண்களையே அலங்கரிப்பேன்

சோகம் வந்தால் - என்
நெஞ்சைப் பிழந்து
நீரூற்றாக்குவேன் - ஏன்?
என் கண்கள் நீ என்பதனால்!

நெருப்பு கொண்டு எரித்தாலும்
இடி வந்து கிழித்தாலும்
என் கண்கள் மட்டும் இறக்காது

கத்தி கொண்டு வெட்டினாலும்
ஊசியினால் குத்தினாலும்
மாறாது என் கண்களின் உருவம் - ஏன்?
என் கண்கள் நீ என்பதனால்!

வீதியில் சென்றாலும்
கடைத்தெருவில் நின்றாலும்
வாலிபர்கள் வளைத்து
என் கண்களை சீண்டுவர்

அடை மழை என்றாலும்
சுடு வெயில் என்றாலும்
என் கண்களுக்கே குடை பிடிப்பேன்

கனவிலும் என் கண்கள்
சிரித்துக் கொண்டே இருக்கின்றன
நினைவிலும் என் கண்கள்
துடித்துக் கொண்டே இருக்கின்றன - ஏன்?
என் கண்கள் நீ என்பதனால்!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
{[['']]}

Social Icons

Featured Posts

Pages

Banner3

Banner3
copyright@nizarjamaldeen. Powered by Blogger.

Popular Posts

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. NSR NIZAR - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger